உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களால் அச்சம்

கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களால் அச்சம்

கரூர், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுற்றித்திரியும் நாய்களால் மனு அளிக்க வந்தவர்கள், அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 25க்கும் மேற்பட்ட அரசு துறைகளை உள்ளடக்கி இயங்குகிறது. தற்போது அலுவலக வளாகத்தில், நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. பல துறைகள் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்துக்கு மக்கள் வருகின்றனர். அப்போது கலெக்டர் அலுவலக வளாககத்தில், சுற்றித்திரியும் நாய்களை பார்த்ததும் அவர்கள் மிரள்கின்றனர். சில நேரங்களில் மனு கொடுக்க வருவோரை, நாய்கள் துரத்துகின்றன. மேலும் ஒன்றுக்கொன்று நாய்கள் சண்டையிடுகின்றன.பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுற்றித்திரியும் நாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ