கரூர்: கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், போதை பொருட்கள் தடுப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.அதில், பள்ளி மாணவர்களிடையே கபடி போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், போலீஸ் எஸ்.ஐ., க்கள் சத்திய பிரியா, ரேவதி, பெண் போலீசார் சங்கீதா, சாஜிலி, சசிகலா உள்பட பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். * கரூர் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில், போதை பொருட்கள் தடுப்பு குறித்த, விழிப்புணர்வு கண்காட்சி, பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது. கண்காட்சியை, எஸ்.பி., பிரபாகர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பிறகு, பிரம்ம குமாரிகள் அமைப்பினர், போலீசார் போதை பொருட்களை தடுப்பது குறித்து, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.நிகழ்ச்சியில், கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், சுமதி, ஷகிரா பானு உள்பட பலர் பங்கேற்றனர்.