உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேர்தல் நடத்தை விதிமுறை அமல் கட்சி கம்பம், விளம்பரங்கள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதிமுறை அமல் கட்சி கம்பம், விளம்பரங்கள் அகற்றம்

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பகுதியில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 15 வார்டுகள் உள்ளன. நேற்று முன்தினம், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, டவுன் பஞ்., பகுதியில் செயல் அலுவலர் விஜயன் தலைமையில், அலுவலர்கள், பணியாளர்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சி கொடி கம்பம், பேனர், சமுதாயம் சார்ந்த பேனர், தட்டிகள் அகற்றப்பட்டன. மேலும், சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட்டன.இதேபோல், நங்கவரம் டவுன் பஞ்., 18 வார்டுகளில் செயல் அலுவலர் காந்தரூபன் தலைமையில் அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த அணைத்து அரசியல் கட்சி கொடி கம்பம், போஸ்டர், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் மற்றும் முக்கிய இடங்களில் நடப்பட்டிருந்த கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., செயல் அலுவலர் யுவராணி தலைமையில், டவுன் பஞ்., பணியாளர்கள் ஈடுபட்டனர்.* மாயனுார் பஸ் ஸ்டாப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கட்சி கொடி கம்பங்களை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ