உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த செலவின சிறப்பு பார்வையாளர் உத்தரவு

கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த செலவின சிறப்பு பார்வையாளர் உத்தரவு

கரூர்:ஓட்டுப்பதிவு நாள் நெருங்கி வருவதால், வாகன தணிக்கை உள்ளிட்ட கண்காணிப்பு பணிகளை அலுவலர்கள் தீவிரப்படுத்த வேண்டும் என, தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பணம் வினியோகம் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.அப்போது அவர், கூறியதாவது:தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை, தேர்தல் அலுவலர்கள் முழுமையாகவும், முறையாகவும் பின்பற்ற வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள், மதுபானங்கள், டோக்கன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுவினர், சோதனை சாவடிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையை வரும் நாட்களில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில், பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர், தேர்தல் செலவின பார்வையாளர் போஸ் பாபு அல்லி, மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி