உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரை சாகுபடிக்கு நீரின்றி விவசாயிகள் தவிப்பு

வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரை சாகுபடிக்கு நீரின்றி விவசாயிகள் தவிப்பு

கரூர்: தென்கரை மேட்டு வாய்க்காலில், ஆகாய தாமரை படர்ந்துள்-ளதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு, சாகுபடிக்கு நீர் கிடைக்காமல் விவசாயிகள் திணறுகின்றனர்.மாயனுார் காவிரி ஆற்றில் உள்ள கதவணையிருந்து, தென்கரை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இதன்மூலம், மாயனுார் முதல், திருச்சி மாவட்டம் தாயனுார் வரை, 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு வாழை, வெற்றிலை, கரும்பு, நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மேட்டூரிலி-ருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், விவ-சாயிகள் மும்மரமாக சம்பா சாகுபடியில் நெல் நடவு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும், நீர்வளத்துறை சார்பில் துார்வாரும் பணி முறையாக செய்யப்படவில்லை. தற்போது, வாய்க்காலில் ஆகாய தாமரை படர்ந்துள்ள நிலையில், நீர் செல்லும் பாதைகளில் தடை ஏற்-பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, கடைமடை பகுதிகளுக்கு முற்றிலும் நீர் செல்லாமல் இருந்து வருகிறது. நெல் நடவில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காமல் உள்ளதால், அவர்கள் திணறி வருகின்-றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை