உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பனை பொருட்கள் விற்பனையை அதிகரிக்க விவசாயிகள் வேண்டுகோள்

பனை பொருட்கள் விற்பனையை அதிகரிக்க விவசாயிகள் வேண்டுகோள்

கரூர்: கதர் கிராம நலவாரியத்தில் பனை பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பரவலாக பனை மரங்கள் உள்ளன. கடந்த, 21 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பனை மரங்களை கொண்டு வீடு கட்டியும், பனை ஓலைகளில் வீடுகளை வேய்ந்தும் வாழ்ந்து வந்தனர்.இதனால் கோடைக்காலங்களில் வரும் வெக்கை, அம்மை நோய் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பனை சோறு, நுங்கு, பதநீர் ஆகியவைகளை பலரும் விற்பனை செய்து பிழைத்து வந்தனர். பனை ஓலைகளில் இருந்து விசிறி, ஓலை பெட்டி பனைபாய் போன்றவை தயாரிப்பது, திருமண விழாவில் கிப்ட் கொடுக்கும் பல்வேறு பொருட்களும் பனைஓலைகளால் செய்ய பயன்படுத்தப்பட்டது. தற்போது பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். இதனால் பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கும், பல்வேறு உணவு விடுதிகளுக்கும் எரிபொருளாக பயன்படுத்தப் படுகிறது.இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: பதநீர் அருந்துவதன் மூலம் மனிதனுக்கு இயற்கையாகவே கால்சியம் சத்து கிடைத்தது. இந்த, பனை மரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கதர் கிராம நலவாரியத்தில் பனை பொருட்களின் விற்பனையை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ