குளித்தலை : கடவூர் பகுதிகளில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அரசு அலுவலகங்களில், கலெக்டர் ஆய்வு நடத்தி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட பணிகளை, நேற்று காலை காணியாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், வட்டார பொது சுகாதார மைய கட்டடம், மைலம்பட்டி ஆர்.ஐ., அலுவலகம் தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் கலெக்டர் தங்கவேலு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.இதேபோல் டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, மாவட்ட மருத்துவப் பணி இணை இயக்குனர் சுதர்சனா மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர், மாவட்ட சமூக நலம், தொழிலாளர் நலம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, மின் வாரியம், நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட அதிகாரிகள் துறைச்சார்ந்த அலுவலகங்களில் ஆய்வு பணி மேற்கொண்டனர்.உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் காலை, 9:00 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரை ஆய்வு பணி மேற்கொண்டனர். கடவூர் யூனியன் குழு தலைவர் செல்வராஜ் மற்றும் யூனியன் பஞ்., தலைவர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.