வீடுகளுக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்-தவர் மதியழகன், 45. இவரது வீட்டுக்குள், 3 அடி நீளமுள்ள கட்-டுவிரியன் பாம்பு நுழைந்தது. இதுகுறித்து புகழூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தீய-ணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான, வீரர்கள் வீட்டுக்குள் மறைந்து இருந்த கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.வேலாயுதம்பாளையம் அருகே புகழூர் பசுபதி நகரை சேர்ந்தவர் ஐயப்பன், 45. இவரது வீட்டில் நாகப்பாம்பு நுழைந்தது. புகழூர் தீயணைப்பு வீரர்கள், நாகப்பாம்பை பிடித்தனர். இரண்டு பாம்புகளையும் தீயணைப்பு வீரர்கள், அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.