சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைது
சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைதுஅரவக்குறிச்சி, நவ. 30-அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.அரவக்குறிச்சி போலீசார், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் வடுகப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவது தெரியவந்தது.இது தொடர்பாக அரவக்குறிச்சி அருகே ராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அக்னி, 46, சின்னதாராபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுந்தரபாண்டியன், 38, ராஜபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த அஜித்குமார், 26, திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பார்த்திபன், 36, அரவக்குறிச்சி அடுத்த மீனாட்சிவலசு அருகில் உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த செல்வராஜ், 47, ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.