உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து ஜெனரேட்டர் அறை

மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து ஜெனரேட்டர் அறை

கரூர்: கரூர் காந்திகிராமத்தில் இ.காலனி சாலையில் மழைநீர் வடிகால் கால்வாய் ஆக்கிரமித்து கட்டியுள்ள ஜெனரேட்டர் அறையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கரூர் வடக்கு காந்திகிராமம் இ.காலனி சாலையில் இருபுறமும், 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைக்காரர்கள் மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் சாலையோரம் ஆக்கிரமித்துள்ளனர். அதிலும், தனியார் நிறுவனம் மழைநீர் வடிகால் ஆக்கிரமித்து ஜெனரேட்டர் வைத்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கரூர் வடக்கு காந்திகிராமம் இ.காலனி பிரதான சாலை வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. அதில், காலை, மாலை நேரத்தில், 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் செல்கின்றனர். இந்த சாலையோரம் உள்ள பெரும்பாலான கடைகள் மழைநீர் வடிகால் கால்வாய் ஆக்கிரமித்துள்ளனர்.குறிப்பாக கரூர்- திருச்சி சாலையில் செயல்படும் தனியார் (பேக்கரி)நிறுவனம் இடது புறத்தில் இ.காலனி பிரதான சாலை செல்கிறது. இங்கு, மழைநீர் வடிகால் கால்வாயை ஆக்கிரமித்து மேல் தளம் அமைத்து பெரிய ஜெனரேட்டர் வைத்துள்ளனர். அதன் அருகில் இரும்பு சீட்டுகளால் அறையில் பொருட்களை சேமித்து வைத்து வருகின்றனர். இவர்கள், கால்வாய் மட்டுமல்லாது, 2 அடிக்கு மேல் சாலையும் ஆக்கிரமித்துள்ளனர். இப்படி சாலை சுருங்கி விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் பள்ளி பஸ்கள் கடந்து செல்லும் போது, எதிரே வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இந்த தனியார் நிறுவனம் மட்டுமல்லாது காய்கறி தரைக்கடைகளால் வாகனங்கள் செல்ல திண்டாட்டம் ஆகிவிடுகிறது. மழை பெய்யும் போது, தண்ணீர் ஓட வழியில்லாமல் சாலையில் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. கரூர் மாநகராட்சி புதிய கமிஷனர், வந்த வேகத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. உடனடியாக மழைநீர் வடிகால் கால்வாய் மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள், கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை