உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்: கலெக்டர்

பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்: கலெக்டர்

பெண் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும்: கலெக்டர்கரூர், அக். 19-''பெண் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும்,'' என, கலெக்டர் தங்கவேல் பேசினார்.தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராவது குறித்த விழிப்புணர்வு முகாம், கரூரில் நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:பெண்கள் பாதுகாப்புக்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடனை, வங்கியில் செலுத்தி வருகின்றனர்.மேலும், தமிழக அரசு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில், உறுப்பினராகி தமிழக அரசின் திட்டங்களை பெண்கள் பெற வேண்டும். பெண் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும். அவர்களின் உயர்க்கல்விக்கும், அரசு கடன்களை வழங்கி வருகிறது.இவ்வாறு பேசினார்.நீதிபதி பரத்குமார், மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலர் பார்வதி, முன்னோடி வங்கி அலுவலர் வசந்தகுமார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயப்பிரதா, தொழில் மைய மேலாளர் ரமேஷ் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ashwinkumar Thirumoorthy
அக் 20, 2024 06:21

என் மதிப்பிற்கும், மரியாதைக்குரிய கரூர் மாவட்ட ஆட்சியாளர் ஐயா அவர்களுக்கும், தினமலர் பத்திரிக்கைக்கும் என் அன்பு வணக்கங்கள். தாங்கள் தொடர்ந்து நம் கரூர் மாவட்டத்திற்காகவும், கரூர் மாவட்ட மக்களுக்காகவும் செயல்பட்டு வருகிறீர்கள். அதற்கு என் முதற்கண் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கரூர் மாவட்ட செய்திகளை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் "தினமலர்" குழுமத்திற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கமெண்ட்ஸ் பதிவின் மூலம் தாங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் ஐயா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நம் தமிழக அரசு "தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் 2024" நடந்துக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வாங்கிய விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியலை தினந்தோறும் "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்" வலைதள பக்கத்தில் மாவட்டத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இதில் நம் கரூர் மாவட்டம் மூன்று தங்கப்பதக்கம், இரண்டு சில்வர் பதக்கம், ஒன்பது பிரான்ஸ் பதக்கம் என்று மொத்தமாக 14 பதக்கத்தை வென்றுள்ளது. இந்த செய்தி கரூர் மாவட்டத்தை சேர்ந்த எந்த வலைதள பக்கத்திலும் வரவில்லை ஆகையால் தாங்களுக்கு இருக்கும் டிவிட்டர் வலை பக்கத்திலோ, அல்லது கரூர் மாவட்ட காவல்துறைக்காக இருக்கும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் வலைபக்கத்திலோ நம் கரூர் மாவட்ட விளையாட்டு வீரர்களின் பதக்க பட்டியலை வெளியிட்டு, விளையாட்டு வீரர்களுக்கு தாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வெளியிட்டால் நம் கரூர் மாவட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதோடு, கரூர் மாவட்ட மக்களுக்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பற்றி தெரியவரும் நன்றி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை