உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

கரூர்: வரும், 6ம் தேதி முதல் நடக்கும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:தமிழக சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., சார்பில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இதை நிறைவேற்ற கோரி, பல்வேறு சங்கங்கள் போராட்டத்தில் ஈடு-பட்டு வருகின்றன. கடந்த டிச., 22ல் சென்னையில் மூன்று அமைச்சர்கள் தலைமையில், அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசியும் தீர்வு எட்டப்படவில்லை.அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களை கொண்ட போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ ஆகியவை வரும் 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் எங்கள் அமைப்பும் கலந்து கொள்கிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை