மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
1 minutes ago
புகழூரில் விழிப்புணர்வு பேரணி
26-Oct-2025
பொறுப்பேற்பு
26-Oct-2025
சந்தையூர் வாரச்சந்தை ஆடு, கோழி விற்பனை
26-Oct-2025
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகளில் கைதான நபர் மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்தது.மதுரை மாவட்டம், மேலுார் தாலுகா, அரிக்கபட்டியை சேர்ந்த நல்லப்பன் மகன் காக்கப்பன் என்ற கார்த்தி, 30. இவர் கடந்த சில மாதங்களாக அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு திருட்டு, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டார்.இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தேடி வந்த நிலையில், கடந்த மாதம் கார்த்திக்கை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.இவரது குற்ற செயல்கள் குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் கார்த்தி மீது குண்டாஸ் வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டதன் பேரில், மாவட்ட எஸ்.பி., பிரபாகர் பரிந்துரைபடி, பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட கார்த்தி மீது அரவக்குறிச்சி போலீசார் குண்டாஸ் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான ஆணையை திருச்சி மத்திய சிறையில் உள்ள கார்த்திக்கிடம் வழங்கப்பட்டது.
1 minutes ago
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025