மேலும் செய்திகள்
கர்ப்ப கால சர்க்கரை நோயை எதிர்கொள்வது எப்படி
21-Sep-2025
கரூர்: கரூர் அருகே மனைவி, மகனை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.அசாம் மாநிலம், சந்திப்பூர் மாவட்டம் தடகா விபரி பகுதியை சேர்ந்தவர் கோபால் சர்மா, 28; இவர் மனைவி அனிமா, 25; மகன் பாகர் சர்மா, 2; புகழூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் கோபால் சர்மா வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம், கோபால் சர்மா வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி அனிமா, மகன் பாகர் சர்மா ஆகியோரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சிய-டைந்த கோபால் சர்மா, போலீசில் புகார் செய்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Sep-2025