உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விடுதியில் தங்குவோர் குறித்து சந்தேகமிருந்தால் தெரிவிக்கலாம்

விடுதியில் தங்குவோர் குறித்து சந்தேகமிருந்தால் தெரிவிக்கலாம்

கரூர்: கரூர் மாவட்டத்தில், தனியார் விடுதிகளில் தங்குபவர்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதிகளில், அறை எடுத்து தங்குவோரின் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும். மேலும், அறையில் தங்குவோரின் நடவடிக்கையில், சந்தேகம் ஏற்பட்டால் உரிமையாளர் அல்லது மேலாளர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை