உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் முதுநிலை நீட் தேர்வு மூன்று மையத்தில் தேர்வு எழுதினர்

கரூரில் முதுநிலை நீட் தேர்வு மூன்று மையத்தில் தேர்வு எழுதினர்

கரூர் : நாடு முழுதும் அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.டி., - எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள், 'நீட்' தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த, 'நீட்' தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. நடப்பாண்டில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, கடந்த ஜூன், 23-ல் நாடு முழுதும், 259 நகரங்களில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., முடித்த, 5,000 டாக்டர்கள் உள்பட நாடு முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதற்கு விண்ணப்பித்திருந்தனர். தேர்வுக்கு முந்தைய நாள் இரவில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது.ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை, 'நீட்' தேர்வு, நேற்று நடந்தது. அதில், கரூரில், தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியில் கல்லுாரியில், 100 பேர், கரூர் மணல்மேடு என்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரியில், 100 பேர், வெள்ளியணை திருமலைநாதன்பட்டி அமராவதி கலை, அறிவியல் கல்லுாரியில், 40 பேர் என, மொத்தம், 240 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். இங்கு, காலை, 9:30 மணியில் இருந்து, 12:30 மணி வரை முதல் ஷிப்டும், மதியம், 3:30 மணியில் இருந்து, 7:00 மணி வரை இரண்டாவது ஷிப்ட் தேர்வும் நடந்தது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ