கரூர்: கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், அதிக விபத்துகள் நடந்து வரும், கோடங்கி ப்பட்டி பிரிவில், உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கோடங்கிப்பட்டி பிரிவு வழியாக, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.அந்த பகுதியில் மேம்பாலம் மற்றும் குகை வழிப்பாதை இல்லாததால், அடிக்கடி விபத் துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை கோட ங்கிப்பட்டி பிரிவின், இரண்டு பக்கமும் வேகத்தடைகள் அமைத்து, சிக்னல் மற்றும் உயர்மட்ட கோபுரத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டன. இருப்பினும், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால், கோடங்கிப்பட்டி பிரிவில், விபத்துக்கள் தொடர்கிறது.இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:கரூரை சுற்றி செல்லும் தேசிய நெடுஞ்சாலை களில், பெரிய ஆண்டாங்கோவில், பெரிச்சு பாளையம், செம்மடை, தவிட்டுப்பாளையம் பகுதிகளில், உயர்மட்ட மேம்பாலம் கட்டப் பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.ஆனால், அதிகளவில் வாகனங்கள் செல்லும் கரூர் சுக்காலியூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில், கோடங்கிப்பட்டி பிரிவில் மேம்பாலம் கட்ட வில்லை. இதனால், விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது. எனவே, கோடங்கிப் பட்டி பிரிவில், உயர்மட்ட மேம்பாலம் கட்ட, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.