கிருஷ்ணராயபுரம் பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டுக-ளான கடைவீதி, மஞ்சமேடு, பகவதியம்மன் கோவில் சாலை, வார சந்தை சாலை ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதி-களில், பஞ்சாயத்து சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.இதில் குடியிருப்புகளில் இருந்து கழிவு பொருட்கள் அகற்-றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், தேவையில்லதா குப்பை அப்-புறப்படுத்துதல், கழிவு நீர் தேங்கிய இடங்களில் பிளிச்சீங் பவுடர் தெளிப்பு ஆகிய பணிகள் செய்யப்பட்டது.