உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கந்து வட்டி வழக்கு: ஒருவர் கைது

கந்து வட்டி வழக்கு: ஒருவர் கைது

குளித்தலை:: குளித்தலை அடுத்த தலைவாசல் பஞ்., சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, 59; விவசாய தொழிலாளி. இவர், பாலவிடுதி பஞ்., சிங்கம்பட்டியை சேர்ந்த திருவேங்-கடம், 42, என்பவரிடம், கடந்த, எட்டு மாதங்களுக்கு முன், 4.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதேபோல், இவரது தம்பி வேல்முருகனின் மனைவி அமிர்தம், 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக, இரண்டு காசோலை, வெற்று பத்திரம், நான்கில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். நான்கு மாதம் கழித்து, ஒரு லட்சம் ரூபாயை, வங்கி கணக்கு மூலமும், நேரில் சென்று, 3 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளனர். அப்போது, திருவேங்கடம், 15 சதவீதம் வட்டி எனக்கூறி, மேலும், 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என, தெரிவித்-துள்ளார். இதுதொடர்பாக, கடந்த ஜூலை, 1ல், திருவேங்க-டத்தின் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது, வேல்-முருகன், அமிர்தம் ஆகியோரின் மொபைல் போனை பிடுங்கி வைத்துக்கொண்டு, கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்-துள்ளனர். இதனால், கரூர் எஸ்.பி., கலெக்டரிடம், கருப்பசாமி அளித்த புகார்படி, பாலவிடுதி போலீசார் திருவேங்கடத்தை கைது செய்-தனர். இதேபோல் மற்றொரு வழக்கிலும், திருவேங்கடத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ