உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் பலாப்பழம் விற்பனை ஜோர்

கரூரில் பலாப்பழம் விற்பனை ஜோர்

கரூர், முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவது பலாப்பழம். தமிழகத்தில் பண்ருட்டி, புதுக்கோட்டை மாவட்ட பலாப்பழங்களுக்கு தனி ருசி உண்டு. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் கைகாட்டி, ஆலங்குடி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் அதிகளவில் பலா உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.சென்ற ஆண்டும், நடப்பாண்டும் பருவமழை அதிகளவில் பெய்து வருவதால் மாவட்டத்தில் பலாப்பழத்தின் விளைச்சல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட, 60 சதவீதம் விளைச்சல் அதிகரித்துள்ளது. விவசாயிகளிடம் நேரடியாக வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்து, பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர்.பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து, காப்பர் ஆகிய சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. கரூர், பசுபதிபாளையம், காந்திகிராமம், ராயனுார் ஆகிய பகுதிகளில் வேன்களில் பலாப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை