உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

கரூர் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

கரூர் : கரூர் மாவட்டத்தில், 1433ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்ப்பாயம்) நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.கரூர் மாவட்டத்தில் புகழூர், கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர், மண்மங்கலம் ஆகிய தாலுக்காவை சேர்ந்த, 203 வருவாய் கிராமங்களுக்கு, நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சி யில், மாவட்ட கலெக்டர் தங்கவேல் பங்கேற்று, பாலராஜபுரம், ரங்கநாதபுரம் வடக்கு, ரங்கநாதபுரம் தெற்கு, மாயனுார், மணவாசி ஆகிய ஐந்து கிராம மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, தாசில்தார் மகேந்திரன் உள்ளிட்ட, அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அதேபோல், கரூர் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., முகமது பைசல் தலைமையில், ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. அதில் கரூர், லட்சுமி நாராயண சமுத்திரம், பாலமாபுரம் பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். கரூர் தாசில்தார் குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். குளித்தலையில்... குளித்தலை தாலுகா அலுவலகத்தில், தோகைமலை குறுவட்டத்தில் உள்ள, 12 கிராமங்களுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட டி.எஸ்.ஓ., சதீஸ் தலைமை வகித்து, மக்களிடம் இருந்து இலவச வீட்டு மனை பட்டா , தனிபட்டா, அரசு சலுகை பெறுதல், மகளிர் உரிமை தொகை, வீட்டு மனை உள்பட, 100க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றார். தாசில்தார் சுரேஷ், மண்டல துணை தாசில்தார் சித்ரா, கலால் தனி தாசில்தார் மகாமுனி, ஆர்.ஐ., முத்துக்கண்ணு மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், வருவாய் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல், கடவூர் தாலுகா அலுவலகத்தில் குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமையில், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார் இளமுருகு மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ