உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தி - வேலாயுதம்பாளையம் டவுன் பஸ் இன்றி மக்கள் அவதி

க.பரமத்தி - வேலாயுதம்பாளையம் டவுன் பஸ் இன்றி மக்கள் அவதி

கரூர்: க.பரமத்தியிலிருந்து, புன்னம் சத்திரம் வழியாக வேலாயுதம்பாளையம் வரை டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலாயுதம்பாளையம், சாலியபாளையம், ஆண்டி சங்கிலிபாளையம், காங்கேயம் பாளையம், பஞ்சையன்குட்டை, கரட்டுப்பாளையம், புதுார்பட்டி, புன்னம் சத்திரம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள், க.பரமத்திக்கு வாரச்சந்தை மற்றும் பல்வேறு பணிகளுக்காக தினமும் சென்று வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு மேலாக, தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. 2016ம் ஆண்டு பல்வேறு காரணங்களை காட்டி, பஸ் செல்வதை நிறுத்தி விட்டனர். பொதுமக்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளிடம், இப்பகுதி மக்கள் மனு அளித்தும் பலனில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி க.பரமத்தியிலிருந்து, புன்னம் சத்திரம் வழியாக வேலாயுதம்பாளையம் வரை டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழ்செல்வன்
ஜூலை 10, 2024 11:59

பல வருடங்களாக மிகவும் கஷ்டப்படுகிறார்கள் மக்கள் அந்த வழியாக பேருந்து செல்ல கலெக்டர் அனுமதி குடுக்க வலியுறுத்துகிறேன்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ