உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடவூர் யூனியன் அவசர கூட்டம் பணிகள் தேர்வு செய்து தீர்மானம்

கடவூர் யூனியன் அவசர கூட்டம் பணிகள் தேர்வு செய்து தீர்மானம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் அவசர கூட்டம் யூனியன் குழு தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கைலாசம், கமிஷனர்கள் சுரேஷ், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 15வது நிதிக்குழு மானியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 2024--25ம் ஆண்டிற்கு, ஊராட்சி ஒன்றிய நிதி ஒதுக்கீட்டிற்கு, பணிகள் தேர்வு செய்தல் தீர்மானம் ஒன்றிய பணியாளர் பன்னீர்செல்வம் வாசிக்க நிறைவேற்றப்பட்டது. யூனியனில், 20 பஞ்., பகுதிகளில் உள்ள மக்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்று, வளர்ச்சி பணிகளை தேர்வு செய்த அந்தந்த யூனியன் கவுன்சிலர்கள், தனித்தனியாக யூனியன் குழு தலைவர் செல்வராஜிடம் வழங்கினர். கவுன்சிலர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ