உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப பெருவிழா

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப பெருவிழா

கரூர், டிச. 14-கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப பெருவிழா நடந்தது.கார்த்திகை தீப பெரு விழாவையொட்டி, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மூலவருக்கு நேற்று மாலை சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மலர்களால் அலங்கரிப்பட்ட தேரில், உற்சவர் கோவிலை சுற்றி சென்றது. பிறகு, ராஜ கோபுரத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு கோவில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது, சுற்றி நின்று கொண்டிருந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அதேபோல், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வீடுகள், வர்த்தக நிறுவனங்களிலும் பொதுமக்கள், மண் விளக்குகளில் தீபம் ஏற்றினர்.* புகழூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருநாளையொட்டி, மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, பவித்திரம் பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகழூர் அக்ரஹாரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும், கார்த்திகை தீப திருநாளையொட்டி, சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.* குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மலையின் மீது, கொப்பரையில், 30 கேன் எண்ணெய் மற்றும் மூன்று மீட்டர் நீளம் உள்ள திரியால் சிவாச்சாரியார் தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் கடம்பவனேஸ்வரர், சிவாயம், மேட்டுமருதுார் செல்லாண்டியம்மன், காளியம்மன். அங்காளபரமேஸ்வரி, தண்ணீர்பள்ளி சடைச்சியம்மன், நங்கவரம் சாத்தாயிஅம்மன், இனுங்கூர் மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தின் மீது உப்பு கொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை