மக்கள் கூட்டமின்றி நடந்த கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம்
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த, பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்களை அளிக்க குறைவான மக்களே வந்திருந்தனர்.கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. மக்களிட-மிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உத-வித்தொகை, திருமண நிதியுதவி. மாற்றுத்திறனாளிகளுக்கான உத-வித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளாக, 259 மனுக்கள் வரப்பெற்றன.நேற்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் குறைவாக இருந்தது. எப்-போதும், 400க்கு மேற்பட்ட மனுக்கள் வரும் நிலையில், 259 மனுக்களே வந்தன. பல்வேறு இடங்களில் தைப்பூசத் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடத்து வருகிறது. இதனால் கூட்டம் குறைவாக இருக்கலாம். அதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, நான்கு பயனாளிகளுக்கு தலா, 3,500 ரூபாய் மதிப்பில் நவீன மடக்கு குச்சி, ஒருவருக்கு, 3,285 ரூபாய் மதிப்பி-லான காதொலி கருவி என, எட்டு பயனாளிகளுக்கு, 2.17 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், சப் - கலெக்டர் பிரகாசம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செழியன், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், உதவி ஆணையர் (கலால் ) கருணாகரன் உள்-பட பலர் பங்கேற்றனர்.