மேலும் செய்திகள்
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
01-Aug-2025
கரூர், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்துக்கு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திருச்சியில், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்துக்கு புதிய நிர்வாகிகள் (2025---29) தேர்வு, ஓய்வு பெற்ற நீதிபதி ரவி தலைமையில் நடந்தது. அதில், தலைவராக தனபதி, செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் சாரதி சுகுமார், துணைத்தலைவர்களாக சத்திய நாராயணன், சேகர், வெங்கடேஷ், திருப்பதி, மித்ரா, இணை செயலாளர்கள் சிவா, மதன், பிரேம் ஆனந்தன், ராஜேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கரூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பது குறித்து, கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
01-Aug-2025