உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவை அருகே சாலை விபத்தில் போலீஸ் பலி

அரவை அருகே சாலை விபத்தில் போலீஸ் பலி

க.பரமத்தி: கரூர் வடிவேல் நகரை சேர்ந்தவர் காதர்கான் (52) வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் இம்ரான் (24) சென்னை வீரபுரத்திலுள்ள பட்டாலியனில் போலீஸாக பணி புரிந்துவந்தார்.இவர் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட கரூருக்கு விடுமுறையில் வந்தார். நண்பர் யுவராஜ் என்பவரை, அரவக்குறிச்சியில் விட்டு விட்டு அப்பாச்சி டூவீலரில் கரூர் நோக்கி இரவு 10.மணியளவில் சென்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்த, இம்ரான் சம்பவ இடத்திலேயே பலியானார். அரவக்குறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி