உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் பள்ளம்: டிரைவர்கள் அவதி

கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் பள்ளம்: டிரைவர்கள் அவதி

கரூர் : கரூரில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் மினி பஸ் ஸ்டாண்டில், பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் பிரதான பஸ் ஸ்டாண்ட் அருகே, மினி பஸ் ஸ்டாண்ட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து கரூர் ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தான்தோன்றிமலை, காந்தி கிராமம், வெங்கமேடு, பசுபதிபாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு, 50க்கும் மேற்பட்ட மினி பஸ்-கள் செல்கிறது.நாள்-தோ-றும், ஆயி-ரக்-க-ணக்-கானோர் மினி பஸ் ஸ்-டாண்ட் வரு-கின்-றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக, மினி பஸ்கள் செல்லும் நுழைவு வாயிலில், பல மாதங்களாக பெரிய அளவில் பள்ளம் உள்ளது. விபத்து ஏற்படும் முன், கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் உள்ள பள்ளங்களை, சீரமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ