உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மனிதாபிமானம் இரண்டாம் மாத சம்பளமும் கல்வி உதவியாக வழங்கல்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மனிதாபிமானம் இரண்டாம் மாத சம்பளமும் கல்வி உதவியாக வழங்கல்

கரூர்: கிருஷ்ணராயபுரம்அ.தி. மு.க., எம்.எல்.ஏ., காமராஜ் ஏø ழ, எளிய மாணவர்களுக்கு இர ண்டாவது மாத சம்பளத்தையும் கல்வி உதவியாக வழங்கினார்.கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற காமராஜ், முதல் மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாயை கடவூர் பகுதியில் தீ விபத்தில் உயிரிழந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினார்.தொடர்ந்து, இரண்டாவது மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாயை கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட ஏழை, எளிய கல்வி பயிலும் 27 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவியாக எம்.எல்.ஏ., காமராஜ் வழங்கினார்.நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் நகுல்சாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் விஜயபாஸ்கர், வீரமணி, முத்துசாமி, மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் சிவதேவன், வெள்ளியணை பஞ்சாயத்து செயலாளர் பெரியசாமி, பஞ்சாயத்து செயலாளர்கள் ஜெகதாபி சுப்பிரமணியன், சணப்பிரட்டி குருமூர்த்தி, மணவாடி சரவணன், பள்ளப்பாளையம் துரைமுருகன், சாரதி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ