உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை விவசாய விளைநிலம் விற்பனை தடுக்க தனிச்சட்டம் வேண்டும்

தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை விவசாய விளைநிலம் விற்பனை தடுக்க தனிச்சட்டம் வேண்டும்

குளித்தலை : குளித்தலை பகுதியில் தண்ணீர் வசதியுள்ள விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக விற்பனை செய்யப்படுகிறது. 'விவசாயத்தை காக்க விளை நிலங்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்' என முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளித்தலை, கருங்காளப்பள்ளி மற்றும் தோகமலை பகுதியில் காவிரி டெல்டா பகுதியாகும். இப்பகுதியில் தென்கரை பாசன வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டுவாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த நான்காண்டாக விளை நிலங்களை தனிநபர்கள் விலைக்கு வாங்கி வீட்டுமனையாக விற்பனை செய்கின்றனர். விளைநிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்யும்போது, அரசியல் கட்சியினர் கொடி, கலர் பூசி தடுப்பு கற்கள் அமைத்து பகிரங்கமாக விற்பனை செய்கின்றனர்.ஆண்டு முழுவதும் தண்ணீர் வசதியுள்ள விளை நிலங்களை வீட்டுமனையாக விற்பனை செய்வது குளித்தலை, தோகமலை பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது.

மானாவாரி பகுதியில் உள்ள விளைநிலங்கள் மட்டும் விற்பனை செய்து வந்த தொழில் அதிபர்கள் தற்போது இயற்கையாக வாய்க்காலில் வரும் தண்ணீரில் விவசாயம் செய்யும் விளைநிலங்களையும் விட்டு வைக்கவில்லை.

ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்ற போர்வையில் போட்டிப்போட்டு பலவகை சுவர் மற்றும் போஸ்டர், 'டிவி' விளம்பரம் மூலம் விவசாய நிலங்கள் விற்பனை செய்யப்படுகிறது.இதனால் விவசாய தொழிலை நம்பியிருந்த விவசாய கூலி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொதுமக்களுக்கு கிடைக்க கூடிய நெல், கரும்பு, வாழை மற்றும் தானியப்பயிர்கள் கிடைக்காத நிலை ஏற்படும். கடந்த தி.மு.க., ஆட்சியில் அதிகளவு விவசாய நிலங்கள் வீட்டுமனையாக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க., ஆட்சியிலும் இந்த நிலை தொடர்கிறது.விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களை காப்பாற்றும் பொருட்டு, நிலங்கள் அபகரிப்பு சட்டம் போல, விளை நிலங்களை விற்பனை செய்வதை தடுக்கவும் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்' என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி