உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதிய ரேசன் கடையை உடனே திறக்க பொதுமக்கள் கோரிக்கை

புதிய ரேசன் கடையை உடனே திறக்க பொதுமக்கள் கோரிக்கை

லாலாப்பேட்டை: மணவாசி பஞ்சாயத்தில் புதியதாக கட்டப்பட்ட பகுதி ரேஷன் கடை ஓராண்டாகியும் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் புதிய கட்டிடம் பழுதடையும் நிலையில் உள்ளது.கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்து யூனியன் மணவாசி பஞ்சாயத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய ரேஷன் கடை அமைக்க பல முறை மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்தாண்டு மணவாசி பஸ் ஸ்டாண்ட் அருகில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.சட்டசபை தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கடை கட்டிடம் திறக்காமல் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் முடிவடையும் நிலையில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறக்கப்படவில்லை. இதனால் கட்டிடம் மெல்ல மெல்ல பழுடைந்து வருகிறது.எனவே, 'புதியதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை உடனடியாக திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விடக்கோரி' அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ