உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவையில் அன்னதான திட்டம்தமிழக அமைச்சர் துவக்கி வைப்பு

அரவையில் அன்னதான திட்டம்தமிழக அமைச்சர் துவக்கி வைப்பு

கரூர்: அரவக்குறிச்சி ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்வாமி திருக்கோவிலில், தமிழக அரசின் அன்னதான திட்டம் நேற்று துவங்கியது. தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அன்னதான திட்டத்தை துவக்க வைத்தார்.தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அன்னதான திட்டம், கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற போது துவங்கப்பட்டது. இதன் மூலம் நாள்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அன்னதான திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவில்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் 'தமிழகத்தில் உள்ள மேலும் 106 கோவில்களுக்கு அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருந்தார். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே, கரூர் கல்யாண வெங்கட்ரமண திருக்கோவில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், ஸ்ரீ மாரியம்மன் கோவில், வெண்ணைமலை பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், சிவாயம் ரத்தினகிரீஸ்வரர் கோவில் மற்றும் குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில் உள்பட ஏழு கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவுபடி கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்வாமி கோவில் அன்னதான திட்ட துவக்க விழா மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா தலைமையில் நேற்று மதியம் 1.35 மணிக்கு நடந்தது. விழாவில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார்.விழாவில், கரூர் டி.ஆர்.ஓ., கிறிஸ்துராஜ், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் தங்கமுத்து, செயல் அலுவலர் முல்லை, செய்தி தொடர்பு அலுவலர் மாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ