உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் சிலவரி செய்திகள்

கரூர் சிலவரி செய்திகள்

பூவன் வாழைத்தார் ரூ.300க்கு விற்பனைகிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதில், பூவன் தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 250 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார்களை, உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.வரத்து அதிகரிப்பால்கொத்தமல்லி கட்டு ரூ.10 கரூர்: தென்மேற்கு பருவ மழையால், கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், கொத்தமல்லி விலை குறைந்துள்ளது.கடந்த மே மாதத்தில், கொத்தமல்லி வரத்து அதிகளவில் இருந்ததால், ஒரு கிலோ, 80 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில் கடந்த, ஜூன் மாதத்தில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்ததால் நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்தது. இதனால், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு, கொத்தமல்லி வரத்தும் குறைந்தது. கடந்த மே மாதம் ஒரு கிலோ, 80 ரூபாய் வரை விற்ற கொத்தமல்லி நேற்று, 50 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்றது. குறிப்பாக, 200 கிராம் கொண்ட, ஒரு கட்டு, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.குடிபோதையில் தவறிவிழுந்த தொழிலாளி பலிகரூர்: கரூர் அருகே, குடிபோதையில் தவறி கீழே விழுந்த ஓட்டல் தொழிலாளி உயிரிழந்தார்.கேரளா மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜன், 52; இவர், கரூர் அருகே வெள்ளியணை பகுதியில், ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம், 16ல் தான்தோன்றிமலை சுங்ககேட் பகுதியில், குடிபோதையில் தவறி கீழே விழுந்த ராஜனுக்கு, இடது கையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜன் உயிரிழந்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.அடிக்கடி ஏற்படும் விபத்துசாலையை சரி செய்யலாமேகுளித்தலை: குளித்தலை அடுத்த, கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கே.பேட்டை பஞ்., அலுவலகம் பஸ் நிறுத்தம் மற்றும் காவிரி காவிரி ஆறு கரை அருகில், மிகவும் ஆபத்தான வளைவு சாலை உள்ளது. இந்த சாலையில் திருச்சி, கரூர் மார்க்கத்தில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள். கார், பைக்குகள் நேருக்கு நேர் மோதி அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதில் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். எனவே, பொது மக்கள் பாதிக்காத வகையில் தேசிய நெடுஞ்சாலையில், ஆபத்தான வளைவு சாலையை நேர் சாலையாக அமைத்து கொடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ