உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரத்தின் மீது பைக் மோதியது கொத்தனாருக்கு தீவிர சிகிச்சை

மரத்தின் மீது பைக் மோதியது கொத்தனாருக்கு தீவிர சிகிச்சை

குளித்தலை : குளித்தலை அடுத்த, மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்தவர் கொத்தனார் ரவிவர்மன், 21. இவர் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் கடந்த பிப்., 25 மதியம், 3:00 மணியளவில் பழைய ஜெயங்கொண்டம் மேட்டு மகாதானபுரம் சாலையில், சொந்த வேலையாக மகாதானபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக் நிலை தடுமாறி பஞ்., அலுவலகம் அருகே சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கீழே விழுந்தார் . அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கரூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது தாயார் ஜானகி, கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை