உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஐ.எஸ்.ஓ., சான்று பெற்ற அரசு பள்ளிக்கு பாராட்டு

ஐ.எஸ்.ஓ., சான்று பெற்ற அரசு பள்ளிக்கு பாராட்டு

கரூர்; பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், ஐ.எஸ்.ஓ., சான்று பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு தெரி-விக்கப்பட்டது.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமையில், ஓய்வூதியம், வங்கி-கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலை-வாய்ப்பு, உதவி உபகரணங்கள், ரேஷன் அட்டை கோருதல் உள்பட மொத்தம், 540 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம், 70 மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுதிறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை வேண்டி, மனு அளித்த இருவருக்கு உடனடியாக அதற்கான ஆணை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு-டியினர் நலத்துறை சார்பாக, 10 பயனாளிகளுக்கு, 66,900 ரூபாய் -மதிப்புள்ள தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும், சத்-துணவு மையங்களில் மணவாசி ஊராட்சி ஒன்-றிய நடுநிலைப்பள்ளி, லெட்சுமணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோட்டை-மேடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய சத்-துணவு மையங்களுக்கு, ஐ.எஸ்.ஓ., 9001 -2015 தரச் சான்றிதழ் பெற தகுதி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்தார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், ஆர்.டி.ஓ., முகமதுபைசல் (கரூர்), தனலெட்சுமி (குளித்-தலை), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இளங்கோவன், உதவி இயக்குனர் (காலல்) கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ