உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், டெபிட் கார்டு திருட்டு

கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், டெபிட் கார்டு திருட்டு

குளித்தலை, குளித்தலை அருகே, கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், டெபிட் கார்டு திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை, அவனியாபுரம் ஜெயபாரதி சிட்டி அவென்யூவை சேர்ந்தவர் சத்யகிரீஸ்வர், 27. எம்.பி.ஏ., பட்டதாரி. இவர் சென்னையில் உள்ள, தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் மேலாளராக பணியில் இருந்து வருகிறார். கடந்த, 13ம் தேதி கடம்பர்கோவில் காவிரி ஆற்றுப்படுகையில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு, தனது காரை ஆற்றங்கரையோரம் நிறுத்தி விட்டு சென்றார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, காரின் பின்னால் வலது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, காரில் இருந்த இரண்டு லேப்டாப்கள், டெபிட் கார்டு மற்றும் வீட்டு சாவி ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். சத்யகிரீஸ்வரர் கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி