உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், செயலாளர் நகுல்சாமி தலைமையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பணியாற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு துணைத்தலைவர் ரமேஷ், கரூர் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தர்மசேனன், கோபால், நாகேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.* இதேபோல், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஏராளமான வக்கீல்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ