உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஞ்சப்பட்டி ஏரி அருகில் மரக்கன்றுகள் பராமரிப்பு

பஞ்சப்பட்டி ஏரி அருகில் மரக்கன்றுகள் பராமரிப்பு

கிருஷ்ணராயபுரம்: பஞ்சப்பட்டி ஏரி அருகில், மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு பணி செய்யப்படுகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டியில், மழை நீர் சேமிக்கும் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழைக்காலத்தில் அதிகமான தண்ணீர் சேமிக்கப்படுகிறது. ஏரி அருகில் காலி இடங்களில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு, மரக்கன்றுகள் பராமரிப்பு பணி செய்யப்படுகிறது. மரக்கன்றுகளை சுற்றி களை அகற்றுதல், தண்ணீர் ஊற்றுதல் ஆகிய பணிகளும் நடந்தன. மேலும் மரக்கன்-றுகள் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ