உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

குளித்தலை,: குளித்தலை அடுத்த தென்னிலை பஞ்., கலிங்கப்பட்டி கிரா-மத்தை சேர்ந்தவர் முனியப்பன், 41; லாரி டிரைவர். இவர், கடந்த, 23 மாலை, 6:00 மணிக்கு, தனக்கு சொந்தமான, 'டி.வி.எஸ்., எக்ஸல்' மொபட்டில், மாமியார் வீடான, காணியா-ளம்பட்டிக்கு சென்றிருந்தார். பின், காணிக்காலம்பட்டி-தரகம்-பட்டி நெடுஞ்சாலையில், திரும்பி வந்து கொண்டிருந்தபோது, திருமலைபாளையம் மாரியம்மன் கோவில் குளம் அருகே, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த முனியப்பனை, அருகில் இருந்த-வர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த, 28ல் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி மோகனப்பிரியா, 28, கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி