உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் மே தின விழா பேரணி

கரூரில் மே தின விழா பேரணி

கரூர், : கரூர் மாவட்ட சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், மே தின விழா பேரணி நேற்று மாலை நடந்தது.கரூர் ஜவஹர் பஜாரில் இருந்து தொடங்கிய பேரணி, பழைய திண்டுக்கல் சாலை, மக்கள் பாதை, லைட்ஹவுஸ் கார்னர் வழியாக உழவர் சந்தையை அடைந்தது. பிறகு, மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில், மாநில சி.ஐ.டி.யு., துணைத்தலைவர் கருப்பையன், மாநில ஏ.ஐ.எஸ்.எப்., செயலாளர் தினேஷ் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் மாவட்ட மா.கம்யூ., செயலாளர் ஜோதிபாசு, இ.கம்யூ., செயலாளர் நாட்ராயன், தொழிற்சங்க நிர்வாகிகள் குப்புசாமி, ஜீவானந்தம், கலாராணி, முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.* புகழூர் காகித ஆலை தொழிலாளர் சங்கம் சார்பில், மே தின பேரணி மாவட்ட தொ.மு.ச., பேரவை தலைவர் அண்ணா வேலு தலைமையில் புகழூரில் நடந்தது. அதில், நகராட்சி தலைவர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ