மேலும் செய்திகள்
கரூர் மாநகராட்சியில் புதிய கட்டட பணிகள் துவக்கம்
24-Nov-2024
கரூர்: கரூரில், 47.39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணி-களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2-ம் கட்ட-மாக பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.அப்போது, அவர் பேசுகையில், ''மகளி-ருக்கு கட்டணமில்லா பஸ் பயணம், மகளிர் உரிமை திட்டம் மூலம் மாதம், 1,000 ரூபாய், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி-களில் காலை உணவு திட்டம், நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்திற்கு அரசு வேளாண் கல்லுாரி, 200 ஏக்கர் பரப்பளவில், 'சிப்காட்' நிறுவனம், ஐ.டி.,பார்க் அமைக்கப்-பட உள்ளது,'' என்றார்.தொடர்ந்து, மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி பஞ்சாயத்தில் புதி-தாக கட்டப்பட்ட, பஞ்சமாதேவி பஞ்., கருங்கல் காலனியில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்பட, மொத்தம், 47.39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டி-லான புதிய திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதன்பின், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பிரதமர் வீடு திட்டத்தின் மூலம் கொளந்தாகவுண்ட-னுாரில், 17.43 கோடி ரூபாயில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டு-மான பணிகளை பார்வையிட்டார். கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்-தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மண்-டல குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, அன்பரசு, உள்பட பலர் பங்கேற்றனர்.
24-Nov-2024