உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொசு ஒழிப்பு பணி மும்முரம்

கொசு ஒழிப்பு பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது.பிச்சம்பட்டி காலனி பகுதியில், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கழிவு குப்பை அகற்றுதல், கழிவு நீர் தேங்கிய பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு, நல்ல குடிநீர் மூடி வைத்தல், பிளாஸ்டிக் கழிவு, பழைய டயர்கள் அகற்றுதல், கொசு உற்பத்தி தடுக்கும் வகையில் அபெட் மருந்து தெளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளில் டவுன் பஞ்சாயத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். டவுன் பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பணிகளை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி