உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதிய பாலத்துக்கு இணைப்பு சாலையின்றி வாகன ஓட்டிகள் தவிப்பு

புதிய பாலத்துக்கு இணைப்பு சாலையின்றி வாகன ஓட்டிகள் தவிப்பு

கரூர்: கரூர் அருகில் க.பரமத்தியில் மழைநீர் வடிகால் மீது பாலம் கட்-டப்பட்டுள்ள நிலையில், இணைப்பு சாலை அமைக்காததால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.கரூர், கோவை சாலையில் க.பரமத்தி வழியாக தினமும், ஆயி-ரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், கரூர், கோவை சாலையில் இருந்து க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு பிரிவு சாலை செல்கிறது. இங்குள்ள, மழைநீர் வடிகால் கால்வாய் மீது புதிதாக சிறிய பாலம் கட்டப்பட்டு, அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால், பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் புதிய பாலத்தின் மேல் பகுதியில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் தார்ச்-சாலைகளும் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். புதிய பாலத்தையொட்டி, உடனடியாக இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை