உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குகை வழிப்பாதையில் தரைத்தளம் சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதி

குகை வழிப்பாதையில் தரைத்தளம் சேதத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர் : கரூர் அருகே, ரயில்வே குகை வழிப்பாதையில் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது குகை வழிப்பாதை அமைக்கப்பட்டது. அதன் வழியாக வெங்கமேடு, பெரிய குளத்துப்பாளையம், சின்ன குளத்துப்பாளையம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் டூவீலர், கார்களில் கரூர் நகருக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக குகை வழிப்பாதையில், தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, பெரிய குளத்துப் பாளையம் ரயில்வே குகை வழிப்பாதையில், சேதம் அடைந்துள்ள, தரைத்தளத்தை சீரமைக்க, கரூர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ