உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்காலில் மாயமான வாலிபர்கள் சடலமாக மீட்பு

வாய்க்காலில் மாயமான வாலிபர்கள் சடலமாக மீட்பு

குளித்தலை, -குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., கணேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ், 30; இவர், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில் புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் குளித்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த முசிறி தீயணைப்பு வீரர்கள், இனுங்கூர், நச்சலுார் வரை தேடிப்பார்த்தனர். இந்த வாய்க்காலில், 400 கன அடி தண்ணீர் வந்ததால், வாலிபரை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, கட்டளை மேட்டுவாய்க்காலில் வந்த தண்ணீர் அணைத்தும், சிவாயம் காட்டு வாரியில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை, 7:15 மணியளவில், உப்பாறு பகுதி வாய்க்காலில், சுபாஷ் சடலமாக மீட்கப்பட்டர்.* இதேபோல், குளித்தலை அருகே, நாகனுார் பஞ்., கலிங்கிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சண்முகம், 23, என்ற வாலிபர், நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் அடித்து செல்லப்பட்டார். கரூர் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணிக்கு, சண்முகம் உடலை சடலமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை