உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் நாம் தமிழர் கட்சியினர் கைது

கரூரில் நாம் தமிழர் கட்சியினர் கைது

கரூரில் நாம் தமிழர் கட்சியினர் கைதுகரூர், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட, பாலியல் கொடுமையை கண்டித்து, நேற்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் முன், ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர்.அதை கண்டித்து, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று மதியம் நாம் தமிழர் கட்சி மாநில மருத்துவ பாசறை பொறுப்பாளர் கருப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து, அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட் டம் நடத்தியதாக, நாம் தமிழர் கட்சியினர், 15 பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ