திருச்செங்கோடு: வைகாசி விசாக தேர் திருவிழா, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்-வரர் கோவிலில், 15 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.இந்நிலையில், அர்த்தநாரீஸ்வரர், சுப்ரமணியர் சுவாமிக்கு புதிதாக தேர் அமைக்க, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, 2.17 கோடி ரூபாயில், புதிய தேர் கட்டுமான பணியை, நேற்று பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தின், நான்காவது பெரிய தேரான அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேர் மற்றும் சுப்ரமணியர் திருத்தேர் நுாறு டன் இலுப்பை, வேம்பு, தேக்கு உள்ளிட்ட மரங்களை கொண்டு, 23 அடி உயரம், 23 அடி அகலம் இரும்பு அச்சுடன் அமைக்கப்பட உள்ளது. 20 பேர் கொண்ட குழுவினர் தேர் அமைக்கும் பணியை செய்ய உள்ளனர். சுப்பிரமணியர் திருத்தேர், 11 அடி உயரம், 11 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட, தி.மு.க., செய-லாளர் மதுராசெந்தில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், நகராட்சி தலைவர் நளினிசுரேஷ்பாபு, அறங்காவலர் குழு தலைவர் தங்க-முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.