உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்

டி.என்.பி.எல்., சார்பில்ரூ.49.50 லட்சம் வழங்கல் டி.என்.பி.எல்., நிறுவனம் (காகித ஆலை) சார்பில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், நலப்பணி திட்டங்களுக்கு செக் வழங்கும் விழா, ஆலை வளாகத்தில் நடந்தது. அதில், கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்.,ல் புதிய மின் கம்பம், தெரு விளக்குகள் அமைத்தல், தளவாப்பாளையம் கிழக்கு பகுதியில் சமுதாய கூடம், பொது கழிப்பிடம் கட்டுதல், மலையம்பாளையம், சேங்கல்பாளையம், மூனுாட்டுப்பாளையம், மூர்த்திப்பாளையம் ஆகிய இடங்களில் சமுதாய கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, 49.50 லட்ச ரூபாய்க்கான காசோலையை, ஆலை பொதுமேலாளர் கலைசெல்வன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோவிடம் வழங்கினார். டி.என்.பி.எல்., நிறுவன அதிகாரிகள் உடனிருந்தனர்.தென்னை மரத்தில் இருந்துதவறி விழுந்தவர் பலிகரூர் அருகே, தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், சணப்பிரட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன், 57. இவர் கடந்த மாதம், 7ல் சணப்பிரட்டி செல்வா நகர் பகுதியில் உள்ள, கந்தசாமி என்பவரது தோட்டத்தில், தென்னை மரத்தில் ஏறி, இளநீர் பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த செல்லப்பன் படுகாயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். செல்லப்பனின் மகன் கலைவாணன், 32, கொடுத்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.மதுவிற்ற 2 பேர் கைதுகரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் வாங்கல், வெள்ளியணை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக பாலசுப்பிரமணியன், 50, செந்தில், 36, ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 16 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.'பார்' பூட்டை உடைத்துபெண்ணுக்கு மிரட்டல்திருச்சி மாவட்டம், மேல குழுமணியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பிரவீனா, 35. நாகராஜ், நெய்தலுார் காலனியில் அரசு அனுமதி பெற்று டாஸ்மாக் கடை நடத்தி வந்தார். அவர் சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து, அவரது மனைவி பிரவீனா, டாஸ்மாக் பாரை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், 'பார்' திறக்கப்படாமல் பூட்டியிருந்தது. அங்கு வந்த கரூரை சேர்ந்த ஹரிஹரன், ராமச்சந்திரன், தென்னவன் ஆகிய மூவரும் சேர்ந்து, பார் பூட்டை உடைத்துள்ளனர். தட்டிக்கேட்ட பிரவீனாவை, தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, பிரவீனா, குளித்தலை போலீசில் புகாரளித்தார். புகார்படி மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.முதலீட்டாளர்கள் மாநாடுகரூரில் நேரடி ஒளிபரப்புமுதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி, கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று நடந்தது.சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. அதை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதுதொடர்பான, நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில், நான்கு மேல்நிலைப்பள்ளிகள், ஆறு பொறியியல் கல்லுாரிகள், மூன்று கலைக்கல்லுாரிகள் மற்றும் ஆறு தொழில்நுட்ப கல்லுாரிகளில் நடந்தது. அதில், மாணவ, மாணவியர் பங்கேற்று, நேரடி ஒளிபரப்பை பார்த்தனர். அதேபோல், ஆத்துார் சிட்கோ தொழிற்பேட்டையில் நடந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியில், 40க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்றனர். கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த, ஒளிபரப்பு நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல், எம்.பி., ஜோதிமணி, மாநகராட்சி மேயர் கவிதா உள்பட, பலர் பங்கேற்றனர்.துாய்மை பணியாளர்சங்க ஆலோசனை கூட்டம்துாய்மை பாரத இயக்கம், தமிழக கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்கள் சங்க மாநில ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் காளிதாசன் தலைமையில் நடந்தது. அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கவுள்ள, மாநில மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் பங்கேற்பது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட தலைவர் சங்கப்பிள்ளை, துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.புன்னம் சத்திரம், மூன்று சாலை பிரிவில்ரவுண்டானா அமைக்க மக்கள் எதிர்பார்ப்புபுன்னம் சத்திரம், மூன்று சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் - ஈரோடு சாலையில் புன்னம் சத்திரம் உள்ளது. அந்த பகுதியில், வேலாயுதம்பாளையம் டி.என்.பி.எல்., ஆலை, நாமக்கல் மாவட்டம், வேலுார், ஈரோடு மாவட்டம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை பிரிந்து செல்கிறது. இதனால், வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. மேலும், அந்த பகுதியில் ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.இந்நிலையில் புன்னம் சத்திரம், மூன்று சாலை பிரிவில் ரவுண்டானா இல்லாததால், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் தாறுமாறாக சென்று வருகின்றன. இதனால், விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே புன்னம் சத்திரம், மூன்று சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.அய்யனார் கோவிலில்மண்டல அபிஷேகம்குளித்தலை அடுத்த வடசேரி பஞ்., காவல்காரன்பட்டியில் செல்வ விநாயகர், பூர்ணாம்பாள், புஸ்கலாம்பாள் சமேத அய்யனார் சுவாமி ஆலயங்கள் தனித்தனியாக உள்ளன. கடந்த நவ., 19ல் கும்பாபிஷேகம் நடந்தது. பின், அன்று முதல் மண்டல அபிஷேகம் நடந்து வந்தது. நேற்று முன்தினம், 48வது மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது. இதில், கோவில் முன் சிறு யாக குண்டம் அமைத்து, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் சிறப்பு அர்ச்சனை உள்பட பல்வேறு பூஜை செய்து செல்வ விநாயகர், பூர்ணாம்பாள், புஸ்கலாம்பாள் சமேத அய்யனார் சுவாமி, பரிவார சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது.அதனை தொடர்ந்து, பரிவார சுவாமிகளுக்கு பால், நெய், திருநீரு, குங்குமம், திருமஞ்சனம், பழங்கள், தேன், பஞ்சாமிர்தம் உள்பட, 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.பொங்கல் தொகுப்பு பெற 'டோக்கன்' வழங்கல்கரூர் அருகே, பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான, டோக்கன் வழங்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் தொகுப்பு வரும், 10ல் வழங்கப்பட உள்ளது. அதற்காக, நேற்று தமிழகம் முழுவதும், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. கரூர் அருகே, தான்தோன்றிமலை, கணபதிபாளையம், அன்புநகர், காளியம்மன் நகர் பகுதிகளில், ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக டோக்கன் கொடுக்கும் பணியை கலெக்டர் தங்கவேல், நேற்று மாலை ஆய்வு செய்து, பொங்கல் தொகுப்பு டோக்கனையும் வழங்கினார். அப்போது, டி.ஆர்.ஓ., கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா உள்பட, அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.வாலிபருக்கு அரிவாள் வெட்டுடிராக்டர் டிரைவர் தப்பி ஓட்டம்வேலாயுதம்பாளையம் அருகே, வாலிபரை அரிவாளால் வெட்டிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புங்கோடை குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், 25. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் தேவபிரகாஷ், 20, என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பிரசாந்த் தன் நண்பர்களுடன் புங்கோடை பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தேவபிரகாஷ், தகாத வார்த்தையால் பேசி, பிரசாந்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். கழுத்தில் காயமடைந்த பிரசாந்த், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய தேவபிரகாசை, வேலாயுதம்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்குஇலவச பயிற்சி இன்று துவக்கம்கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, இன்று தொடங்குகிறது.இதுகுறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், உதவி வேளாண் அலுவலர் பணிக்கு, 84 காலி பணியிடங்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு, 179 காலி பணியிடங்களுக்கான தேர்வு வரும் பிப்., 7ல் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று முதல் தொடங்குகிறது. போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது, 04324-223555, 90038-51307 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.ரஸ்தாளி வாழைத்தார்ரூ.300க்கு விற்பனைகிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன் பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் பூவன் தார், 250 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதனை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.7 செல்போன் திருடியஇளைஞருக்கு 'காப்பு' அரவக்குறிச்சி அருகே, ராஜபுரம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கதிர், 19. இவர் தன் நண்பர்களுடன், கொத்தப்பாளையம் தடுப்பணைக்கு குளிக்க சென்றார். அப்போது, அவர்களுடன் எடுத்துச்சென்ற, ஏழு செல்போன்களை கரையில் வைத்து விட்டு குளிக்க சென்றுள்ளனர். பின், கரைக்கு வந்து பார்த்தபோது, செல்போன்கள் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணபுரம் ஏர்போர்ட் நகரை சேர்ந்த சரவணன் மகன் தனுஷ் வெங்கட் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 81,000 ரூபாய் மதிப்புள்ள, ஏழு செல்போன்களை மீட்டனர். தொடர்ந்து, தனுஷ் வெங்கட்டை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.போதையில் தவறி விழுந்தமுதியவர் உயிரிழப்புபுன்னம்சத்திரம் பகுதியில், மது போதையில் நடந்து சென்ற முதியவர், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அடிபட்டு உயிரிழந்தார்.கர்நாடகா மாநிலம், பெங்களூரு எண்ணுார் பண்டா வடக்கு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 57. இவர், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புன்னம்சத்திரம் பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பழனிச்சாமி, புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். பின், பாலத்தின் அடியில் போதையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், வேலாயுதம்பாளையம் போலீசாருக்கும், பழனிச்சாமியின் மனைவி ராணிக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.'நான் முதல்வன்' திட்டத்தில்மாணவர்கள் கல்லுாரி களப்பயணம்நான் முதல்வன்' திட்டத்தில், அரசு பள்ளிகளில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் கல்வியில் தொய்வின்றி தொடர்ந்து பயில வசதியாக பல்வேறு செயல்பாடுகள், அனைத்து அரசு பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, குளித்தலை, தோகைமலை யூனியன் அரசு பள்ளிகளில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், 'நான் முதல்வன்' திட்டத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காந்தி கிராம கிராமியம் பல்கலைக்கழகம், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதில், உயர் கல்வி பயில்வதற்கு ஆர்வமூட்டுதல், கல்லுாரி வளாகம், கல்லுாரிகளில் செயல்படும் பல்வேறு துறைகள், வகுப்பறை, கலையரங்கம், நுாலகம், விளையாட்டு மைதானம் உள்பட கல்லுாரிகளில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. 110 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இதேபோல், குளித்தலை அரசு மகளிர், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரும் கல்லுாரி களப்பயணம் மேற்கொண்டனர்.ரேஷன் கடைகளுக்கு செங்கரும்புஅனுப்பும் பணி தொடக்கம்கூட்டுறவு சங்கங்களில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு செங்கரும்பு அனுப்பும் பணி தொடங்கியது.பொங்கல் திருவிழாவையொட்டி, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகளுக்கு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வரும், 10ல் வழங்கப்படுகிறது. அதற்காக, கூட்டுறவுத்துறை சார்பில், விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பு வாங்கும் பணிகள் நடந்து வருகின்றன.கரூர் மாவட்டத்தில் உள்ள, 600க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம், பொதுமக்களுக்கு செங்கரும்பு வினியோகம் செய்யும் வகையில், கூட்டுறவு சங்கங்களுக்கு செங்கரும்பு கட்டுகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன. பின், கரூரில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் இருந்து, முழு நீள செங்கரும்பு கட்டுகள், வேன் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி, நேற்று தொடங்கியது.அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்கரூர் சட்டசபை தொகுதி, ஆத்துார் பூலாம்பாளையம் கிராம பஞ்சாயத்து, அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், செல்லரசபாளையத்தில் நடந்தது. அதில், வரும் எம்.பி., தேர்தலுக்காக, கரூர் சட்டசபை தொகுதி காதப்பாறை பஞ்.,ல் உள்ள வார்டுகளில் பூத் கமிட்டி பணிகளை விரைவுபடுத்துதல், நிறைவேற்றப்படாத தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகளையும், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுதுள்ளதையும், பொதுமக்களிடம் எடுத்து கூறி பிரசாரம் செய்வது குறித்து, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கமளித்து பேசினார்.மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமல கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் தங்கமணி, முன்னாள் பஞ்., செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை