உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், வட்டார தலைவர் செல்வி தலைமையில், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், தமிழகம் முழுதும் உள்ள சத்துணவு மையங்களுக்கு, சிம்கார்டு வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும், பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் மகாவிஷ்ணு, கருணாகரன், சுந்தரம், கமலகன்னி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி