உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேட்டு மகாதானபுரத்தில் நெல் அறுவடை பணி

மேட்டு மகாதானபுரத்தில் நெல் அறுவடை பணி

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் பகுதியில், நெல் அறுவடை பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் பஞ்சாயத்து மேட்டு மகாதானபுரம் பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ளனர். வாய்க்கால் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது நெல் சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களில், நெற்கதிர்கள் விளைச்சல் கண்டுள்ளது. விளைந்த நெற் கதிர்களை, விவசாயிகள் டிராக்டர் இயந்திரம் கொண்டு அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தாண்டு, நெல் சாகுபடி மூலம் ஓரளவு மகசூல் கிடைத்துள்ளது. இந்த பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி பணிகள் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை